News April 23, 2025
காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு எண் இல்லாத பைக் தாக்குதல் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
Similar News
News December 6, 2025
தி.குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை: BJP

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் மதக் கலவரம் ஏற்படவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை என்ற அவர், இந்தியாவில் தானே அயோத்தி உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். NDA கூட்டணியின் ஆட்சி ராமரின் ஆட்சியாகவே இருக்கும் என தெரிவித்த நயினார், சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபடுகிறீர்களா என திமுகவை சாடியுள்ளார்.
News December 6, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

தற்போது 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு டிச.12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டவுள்ளது. இந்நிலையில், டிச.12-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால், உடனே கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
விமான கட்டணத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயம்

இண்டிகோ விமான சேவை பாதிப்பால், பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை 10 மடங்கு வரை அதிகரித்தன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில், குறிப்பிட்ட பயணங்களுக்கு தகுந்த டிக்கெட் விலையை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என, விமான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது, விமான போக்குவரத்து சீராகும் வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


