News July 22, 2024
செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரை இருதயவியல் மூத்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர். அதன் பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 28, 2025
சிரிக்கும் ரோஜா பிரியம்வதா கிருஷ்ணன்

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியம்வதா கிருஷ்ணன், ‘நரிவேட்டா’ படத்தில் வரும் மின்னல்வள பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது சிவப்பு நிற ஆடையில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. ரோஜா மலர் பிரியம்வதாவை பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 28, 2025
ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை அடக்க வன்முறையை கையாண்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்நாட்டு Ex PM ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புர்பச்சல் ஊழல் வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில் ஹசீனா & அவரது குடும்பத்தினருக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
NDA வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளது: நாராயணசாமி

புதுச்சேரியில் INDIA கூட்டணி வாக்குகளை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என Ex CM நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், NDA கூட்டணி பிரிந்து கிடப்பதால், அந்த வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று விஜய் முன்னிலையில் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் தவெகவில் இணைந்தார். அத்துடன், டிசம்பரில், அங்கு விஜய் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.


