News March 17, 2024
எல்லையில் தீவிரம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் உதகை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து குந்தா ஊராட்சி ஒன்றியம் , கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி குந்தா கூடலூர் , பந்தலூர் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட உள்ளது. இந்த தகவல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 6, 2025
ஊட்டி சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

நீலகிரி மலை ரயில் நிர்வாகம், சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடைமேட்டுப்பாளையத்தில் காலை, 9:10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06171) ஊட்டியை மதியம், 2:25 மணிக்கு சென்றடையும். இயக்கப்படும் நாட்கள்: டிச., 25, 27, 29, 31. ஜன., 2,4, 15, 17, 23, 25.ஊட்டியில் இருந்து காலை, 11:25 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06172) மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
News December 6, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


