News March 21, 2025
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: ஜூன் 30 வரை அவகாசம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வருகிற ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் உறுதியாகும். அதேபோல் பென்ஷன் முதிர்வு தொகையும் மிகப்பெரிய தொகை வழங்கப்படும். தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஒருவர், இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதற்கு மத்திய அரசு ஜூன் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.
Similar News
News September 15, 2025
அடுத்த 5 நாள்கள் மழை நீடிக்கும்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு – மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News September 15, 2025
விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் 3 தலைவர்கள்?

தொலைபேசி மூலம் சமாதானம் செய்த நயினாரிடம் <<17709574>>OPS<<>> பிடிகொடுக்காமல் பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், TVK உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் பதிலளித்துள்ளார். ஏற்கெனவே விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என டிடிவியும் கூறியிருந்தார். இதனால், OPS, TTV, செங்கோட்டையன் இணைந்து, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News September 15, 2025
முதல்வரிடம் மக்கள் கொடுத்த 9,391 மனுக்களின் நிலை என்ன?

மாவட்டங்களில் நடந்த ஆய்வு கூட்டங்களில், முதல்வரிடம் பொதுமக்கள் நேரடியாக கொடுத்த 9,391 மனுக்களில், இதுவரை 255 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மனுக்களுக்கு தீர்வு காண உயரதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், 5,570 மனுக்கள் தொடர்பான பணிகள் வகைப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.