News August 3, 2024
காப்பீடு ப்ரீமியத்துக்கு ஜிஎஸ்டியில் விலக்கு: மம்தா

காப்பீடு ப்ரீமியத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க GST குழுத்தலைவரும், நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனுக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், காப்பீடு பிரீமியம் மீது வரி விதிப்பது, மக்கள் விரோத செயல் என்றும், சாமானிய மக்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆயுள், மருத்துவ காப்பீடு பிரீமியம் மீது 18% GST வரி விதிக்கப்படுகிறது.
Similar News
News November 20, 2025
ரஷ்யா – பிரிட்டன் இடையே மோதலா?

பிரிட்டனின் கடல் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யாவின் கப்பலான ‘Yantar’, கண்காணிப்பு விமானிகள் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. ரஷ்யா இதை ஆராய்ச்சி கப்பல் என்று கூறினாலும், பிரிட்டன் ரஷ்யாவின் உளவு கப்பல் என குற்றஞ்சாட்டியுள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும் என கூறிய பிரிட்டன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் மூலம் இருநாடுகள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
News November 20, 2025
கவர்னரின் அடாவடி: CM ஸ்டாலின்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக, மத்திய அரசை கண்டித்து INDIA கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், SIR மூலம் வாக்குரிமையை பறித்தும், Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைத்தும், மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி என அனைத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
மசோதா ஒப்புதலுக்கு காலக்கெடு விதிக்க முடியாது: SC

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னருக்கு குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க முடியாது என SC அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. TN அரசின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது எனவும், மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.


