News April 28, 2025
பண்டுக்கு போதாத காலம்.. ₹24 லட்சம் அபராதம்

MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் LSG படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியுடன் சேர்த்து LSG கேப்டன் பண்டுக்கு இன்னொரு அடியும் விழுந்துள்ளது. ஃபீல்டிங்கின் போது ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவருக்கு ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் நடந்த MI-க்கு எதிரான போட்டியிலும், அவருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News April 28, 2025
160 தொகுதிகளில் அதிமுக போட்டி? இபிஎஸ் திட்டம்

2026 தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளன. தேமுதிக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க, 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமென இபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், எஞ்சிய 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை கூட்டணி ஏற்குமா?
News April 28, 2025
ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’..!

இப்பவே வெயில் இப்படி இருக்கே, கத்திரி வெயில் தொடங்கினால் அவ்ளோதான். மே 4-ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திர காலம் மே 28 வரை நீடிக்கிறது. இதனால், மே 1 முதலே பல இடங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்ப அலை வீச வாய்ப்பில்லை என்றாலும், வறண்ட காற்று மற்றும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!
News April 28, 2025
சிந்து நதி விவகாரம்.. அச்சத்தில் பாக். விவசாயிகள்

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அது பாகிஸ்தானை பாலைவனமாக்கும் என அந்நாட்டு விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாயம் இல்லாமல் மக்கள் பட்டினியில் உயிரிழப்பர் எனவும், மொத்த நாட்டு மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என இந்தியா கூறிவருகிறது.