News February 27, 2025

டாஸ்மாக் போர்டுகளில் எண்.. உறுதி செய்ய அறிவுறுத்தல்

image

<<15597315>>டாஸ்மாக்<<>> போர்டுகளில் எண்கள் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதாெடர்பாக டாஸ்மாக் மேலாளர்களுக்கு புதிய அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர்டுகளில் எண்கள் அழிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க முடியாமல் இருந்தனர். போர்டுகளில் எண்கள் உறுதி செய்யப்பட்டால், இனி வாடிக்கையாளர்களால் புகார் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 28, 2025

பள்ளிகளில் சாதிப்பெயர் நீக்கம்.. அரசுக்கு ஐகோர்ட் கெடு

image

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

News February 28, 2025

ராசி பலன்கள் (28.02.2025)

image

மேஷம் – தாமதம், ரிஷபம் – ஆதரவு, மிதுனம் – பாராட்டு, கடகம் – மேன்மை, சிம்மம் – புகழ், கன்னி – பணிவு, துலாம் – வெற்றி, விருச்சிகம் – செலவு, தனுசு – பயம், மகரம் – கவலை, கும்பம் – லாபம், மீனம் – ஆதாயம்.

News February 28, 2025

இதுவே கடைசி வாய்ப்பு: TNPSC

image

குரூப் 4 பணியிடங்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய TNPSC கால அவகாசம் வழங்கியுள்ளது. குரூப் 4 தேர்வில் வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு நாளை முதல் மார்ச் 9ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது. எனவே, இப்பணியிடங்களுக்கு சான்றிதழ் குறைபாடாக பதிவேற்றம் செய்தவர்களும் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு, TNPSC அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!