News August 21, 2024
பட்டியலினத்தவரை கட்சியில் சேர்க்க அறிவுறுத்தல்

பாமகவில் அதிகளவில் பட்டியல், பழங்குடியினத்தவரை சேர்க்க ராமதாஸ் அறிவுறுத்தியதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்ட அரூர் சட்டசபை தொகுதி அமமுக மாவட்ட கலை இலக்கிய அணி இணைச் செயலாளர் அன்பழகன் தலைமையில், SC, ST பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ராமதாஸ் முன்னிலையில் நேற்று பாமகவில் இணைந்தனர். முன்னதாக, தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராக முடியாது என திருமா பேசி இருந்தார்.
Similar News
News March 19, 2026
செங்கையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News March 19, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரம்ஜானை முன்னிட்டு நாளை முதல் 3 நாள்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT
News March 19, 2026
ரயில்களில் தலையணை, பெட்ஷீட் திருடினால்..?

யாருக்கு தெரியப்போகுது என்று ரயிலில் பயணிக்கும் போது, தலையணை – பெட்ஷீட்களை திருடினால் என்ன தண்டனை தெரியுமா? ரயில்வே சொத்துச் சட்டம், 1966-ன் படி திருடிய பொருள்களுடன் முதல்முறையாக பிடிபட்டால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் விதிக்கப்படும். 2017-18-ம் ஆண்டின் அறிக்கையின்படி, மேற்கு ரயில்வேயில் 1.95 லட்சம் துண்டுகள், 81,736 பெட்ஷீட்கள், 5,038 தலையணைகள் திருடு போயிருக்கிறதாம்.


