News August 7, 2025
இன்ஸ்டா கொண்டுவரும் அசத்தல் ‘Repost’ அப்டேட்!

இன்ஸ்டாவில் பார்த்து ரசித்த ரீல்களையும், போஸ்டுகளையும் Reshare செய்ய சுலபமான வழி வந்துவிட்டது. Public ரீல்களுக்கும், போஸ்டுகளுக்கும் கீழே உள்ள ‘Repost’ பட்டனை அழுத்தினால் போதும். ஆனால், இது Profile Grid-ல் தெரியாது. இதற்காக, தனியாக ஒரு தனி ‘Reposts tab’-ம் கொடுக்கப்படும். மேலும், இந்த ரீல்ஸ்களின் முழு Credit-ம் Original Content Creator-களுக்கு கொடுக்கப்படுவதையும் இன்ஸ்டாகிராம் உறுதி செய்கிறது.
Similar News
News March 3, 2026
தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்

ஸ்டாலினை ப.சி சந்தித்தபின், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு இன்று இறுதியாகும் என்று காங்., மூத்த தலைவர் கோபண்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவை எதிா்த்து ஒரு கருத்து கூட சொல்ல துணிவற்ற கட்சி தவெக; அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தற்கொலை சமம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை எதிர்க்க அஞ்சும் தவெகவுடன் காங்., எப்படி கூட்டணி அமைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
News March 3, 2026
வெள்ளி விலை 3 நாள்களில் கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

தங்கம் விலை இன்று குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதன்படி, இன்றும் 1 கிராம் வெள்ளி ₹315-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. அதேநேரம், இம்மாதம் தொடங்கிய 3 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாள்களிலும் விலை சற்று குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 3, 2026
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

*1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். *அதை 3-ல் பெருக்குங்கள் *அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள் *கிடைக்கும் விடையை மீண்டும் 3-ல் பெருக்குங்கள் *இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும் *அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க. நீங்களும் நண்பர்கள் கிட்ட கேட்டு மாஸ் பண்ணுங்க.


