News April 10, 2025
இன்ஸ்டா காதல்: கடல் கடந்து வந்த தேவதை

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. மொழி, மதம், நாடு கடந்தும் காதல் மலரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஆந்திராவை சேர்ந்த சந்தனின் கதை. இன்ஸ்டகிராம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஜாக்லின் ஃபோரோவுடன் சந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. திருமணம் செய்வது என இருவரும் முடிவெடுக்க, சந்தனை தேடி ஆந்திராவில் உள்ள அவரது கிராமத்துக்கு ஜாக்லின் தற்போது வந்துள்ளார். செம லவ்ல?
Similar News
News December 31, 2025
பொருளாதாரத்தில் இந்தியா சாதனை

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதார மதிப்பு 4.18 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2030-க்குள் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் GDP 8.2% ஆக வளர்ச்சி அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News December 31, 2025
அட்டகாசமான மார்கழி கலர் கோலங்கள்!

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது மிகவும் சிறப்பான விஷயமாகும். ஆனால் கடும் குளிர், திருட்டு சம்பவங்களுக்கு பயந்து இரவிலேயே பெண்கள் கோலம் போடுகின்றனர். ஆனால் இரவில் கோலம் போடுவது தவறு என முன்னோர்கள் எனக் கூறுகின்றனர். எனவே, 5 முதல் 10 நிமிடங்களுக்குள் போடக்கூடிய சில எளிய கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து வீட்டில் முயற்சிக்கவும்.
News December 31, 2025
திருத்தப்பட்ட ITR தாக்கல்.. இன்றே கடைசி

திருத்தப்பட்ட ITR செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். ஏற்கனவே தாக்கல் செய்த ITR-ல் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபட்ட விவரங்கள் இருந்தால், அதை திருத்தி இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் ₹1,000 – ₹5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு, காலக்கெடுவை நீட்டிக்க பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.


