News August 21, 2024
INSTA பாலோயர்: மோடியை பின்தள்ளிய இந்தி நடிகை

இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் எண்ணிக்கையில், பிரதமர் மோடியை இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் பின்னுக்கு தள்ளியுள்ளார். இன்ஸ்டாகிராமில் மோடிக்கு 91.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். ஆனால், அதைவிட அதிகமாக ஸ்ரத்தா கபூருக்கு 91.4 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். ஆனால், எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் மோடி 101.2 மில்லியன் பாலோயர்களுடன் அதிக பாலோயர் கொண்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Similar News
News March 19, 2026
என் பெயரை தப்பா யூஸ் பண்றாங்க.. கம்பீர் வழக்கு!

T20 WC வெற்றியில் கம்பீரின் பங்கு முக்கியமானது. இந்நிலையில் தனது அடையாளத்தை AI Deepfake மூலம் தவறாக பயன்படுத்தியதாக Meta, X, Youtube உள்ளிட்ட 16 பேர் மீது அவர் வழக்கு தொடுத்துள்ளார். டெல்லி ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது பெயர், படம், குரலை பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு அவை வணிக நோக்கத்திற்காக அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
News March 19, 2026
அதிமுக கூட்டணிக்கு நோ… விஜய்க்கு என்ன பலன்?

அதிமுக கூட்டணிக்கு விஜய் No சொன்னதால் இதெல்லாம் சாதகமாம்: *40 சீட்டுகள் வென்று து.முதல்வர் ஆனாலும், நீண்டகால நோக்கில் கட்சியை வளர்க்க அது உதவாது *கொள்கை எதிரி பாஜக, ஊழல் கட்சி அதிமுக என மேடையில் பேசியதை உறுதிப்படுத்தும் *தனித்து சீட்களை வெல்ல முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகள் பெறலாம் *தவெகவின் பலத்தை காட்டிவிட்டால், அடுத்தமுறை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவது ஈஸி. நீங்கள் என்ன சொல்றீங்க?
News March 19, 2026
தமிழக அதிகாரிகள் மாற்றம்: Ex கவர்னர் ரவி காரணமா?

முக்கிய அதிகாரிகளை ECI அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் Ex TN கவர்னர் RN ரவி கொடுத்த லிஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3 மாதங்களாக ஆய்வு செய்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை டெல்லி தலைமையிடம் அவர் கொடுத்துள்ளாராம். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக நயினார், அண்ணாமலை போன்றவர்களிடமும் ஆலோசிக்கும் மத்திய உள்துறை அதன்படி ECI-க்கு பரிந்துரைக்கிறதாம்.


