News September 9, 2025
INSPIRING: பிச்சை எடுத்தவர் Photo Journalist ஆன கதை!

மும்பை ரயில்களில் பிச்சை எடுத்த ஜோயா தாமஸ், இந்தியாவின் முதல் திருநங்கை Photo Journalist ஆக உருவெடுத்துள்ளார். பிச்சை எடுத்த பணத்தில் கேமரா வாங்கியவர், திருநங்கைகளின் வாழ்க்கையை பதிவு செய்து வந்தார். ஒரு குறும்படத்தில் நடித்து ஃபேமஸான அவருக்கு, உள்ளூர் ஊடகம் Photo Journalist வாய்ப்பு கொடுத்தது. லாக்டவுனில் வெளிமாநில தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை ஆவணம் செய்ததில் இவர் முக்கிய பங்காற்றினார்.
Similar News
News September 10, 2025
அன்னை தெரசா பொன்மொழிகள்

*தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும். *ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை. *சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை உள்ளது. *உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள். *மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
News September 10, 2025
நேபாளில் ராணுவ ஆட்சி

நேபாள் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேபாள் ஜனாதிபதி, PM ராஜினாமா செய்தனர். நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நேபாள் ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.
News September 10, 2025
‘96 பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில்

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத கூட்டணியாக இயக்குநர் பிரேம்குமார், பஹத் பாசில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் எனவும் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார். ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும், விக்ரமுடனான படத்திற்கு திரைக்கதை எழுத வேண்டியிருப்பதாக பிரேம்குமார் தெரிவித்தார்.