News October 13, 2025

TN முழுவதும் மருந்து நிறுவனங்களில் ஆய்வு!

image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு செய்ய TN அரசு உத்தரவிட்டுள்ளது. கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து, பல்வேறு ஆய்வுகளுக்கு பின் ஸ்ரீசன் பார்மாவின் உரிமத்தை அரசு ரத்து செய்தது. அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விதிகளை மீறிய இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

Similar News

News October 13, 2025

கரூர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சீமான் எதிர்ப்பு

image

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது, TN காவல்துறையை அவமதிப்பது போல் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நடித்த ‘புலன் விசாரணை’ படம் வேணும்னா நல்லா இருக்கும், ஆனால் CBI விசாரணை நல்லா இருக்காது என்று சீமான் விமர்சித்துள்ளார். மாநில விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐ-க்கு வழக்கை மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள சீமான், சிபிஐ விசாரணையை ஏற்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

News October 13, 2025

இதற்காகவே 3 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு

image

2025-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, ஜோயல் மொகிர்(USA), பிலிப் ஆகியான்(FRA), பீட்டர் ஹோவிட்(UK) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிசில் ஒரு பாதி ‘தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த வளர்ச்சி காரணிகளை அடையாளம் கண்டதற்காக’ மொகிருக்கும், இன்னொரு பாதி ‘படைப்பாக்க அழித்தல் மூலம் நீடித்த வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கியதற்காக’ ஆகியான், ஹோவிட் இருவருக்கும் கூட்டாகவும் பகிர்ந்தளிக்கப்படும்.

News October 13, 2025

BREAKING: தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் 2 முறை அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹200 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹440 உயர்ந்திருப்பதால் ஒரே நாளில் ₹640 கூடியுள்ளது. தற்போது, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,580-க்கும், 1 சவரன் ₹92,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

error: Content is protected !!