News March 16, 2024
கடலூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

கடலூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News October 23, 2025
கடலூர்: மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

காவேரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு 60,000 கன அடி வரை அதிகரிக்கக்கூடும். எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (அக்.23) இரவு வெளியிட்டுள்ள செய்தி குறித்து தெரிவித்துளார்.
News October 23, 2025
பெற்றோர் இறந்ததால் இளைஞர் தற்கொலை

நெய்வேலி வட்டம் 30-ஐ சேர்ந்தவர் ஆகாஷ்(23). இவரின் பெற்றோர் ஜெயக்குமார் மற்றும் சீதாலட்சுமி இருவரும் இறந்து விட்டனர். இதனால் பெற்றோர் உயிரிழந்ததால் ஆகாஷ் தன்னுடன் யாரும் இல்லை என்று மன வருத்தத்தில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 23, 2025
விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீரில் மூழ்கிய இளம் நெற்பயிர்களை பாதுகாத்திடவும், நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அனுகி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (அக்.23) தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் 66,800 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.