News March 22, 2025

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு!

image

முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு நடத்தியது. அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட குழு முல்லை பெரியாறு அணைக்கு வந்தது. தொடர்ந்து பேபி அணை, மதகுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் பின் குமுளியில் இன்று மாலை கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், தமிழக விவசாயிகளும் பங்கேற்கவுள்ளனர்.

Similar News

News March 22, 2025

IPL: கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்…!

image

18வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. கடந்த முறை கோப்பையை கொல்கத்தா அணி வென்றதால், அந்த அணியின் Home Ground ஆன ஈடர்ன் கார்டன் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது. ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியும் சற்றுநேரத்தில் மோத உள்ளன. டாஸ் வென்று முதலில் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

News March 22, 2025

6 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழை கொட்டும்

image

இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை, சென்னை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News March 22, 2025

சூப்பர் ஓவர் விதியில் சூப்பரான மாற்றம்

image

ஐபிஎல் போட்டி டை ஆனால், ஒருமணி நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர் வேண்டுமானாலும் வீசலாம் என புதிய விதி வந்துள்ளது. போட்டி முடிந்து 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்க வேண்டும். அது டை ஆனால் 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் வீச வேண்டும் என்பது விதி. கடைசி சூப்பர் ஓவரை நேரத்தை பொறுத்து நடுவர் முடிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!