News March 20, 2025

எடை குறைப்பு, சர்க்கரை நோய்க்கு ஊசி வந்தாச்சு!

image

சர்க்கரை நோய் (டைப் 2) மற்றும் உடல் எடை குறைப்பிற்கு உலகளவில் பிரபலமான USAவின் Mounjaro மருந்து இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒற்றை டோஸ் குப்பி மட்டுமே தற்போது கிடைக்கும். இந்த மருந்தை வாரம் ஒரு முறை, அதுவும் பரிந்துரைக்கப்பட்ட உணவு, உடற்பயிற்சிகளுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் சர்க்கரை நோய், உடல் பருமனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News March 21, 2025

கிழங்குகளும்… பயன்களும்…

image

*மரவள்ளிக் கிழங்கு – இதயத் துடிப்பை சீராக வைக்கும்.
*சேப்பக்கிழங்கு – உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
கருணை கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
*சர்க்கரைவள்ளிக் கிழங்கு – சரும பாதுகாப்புக்கு பயனுள்ளது.
*உருளைக் கிழங்கு – நார்சத்தை அதிகரிக்கும்.
*பனங்கிழங்கு – செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

News March 21, 2025

மார்ச் 21: வரலாற்றில் இன்று!

image

*1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கிய இலங்கை அரசு, அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
*2006 – X (ட்விட்டர்) சமூக வலைதளம் உருவாக்கப்பட்டது.
சிறப்பு நாள்:
உலக பொம்மலாட்ட தினம்.
உலக கவிதைகள் தினம்.
உலக காடுகள் தினம்.
சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்.

News March 21, 2025

நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை

image

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. PAKக்கு அதிகளவில் கடற்படை சார் தளவாடங்களை நெதர்லாந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி கன்னிவெடி தகர்ப்பு கப்பல்கள், கடலோர ரோந்து கப்பல்களையும் அந்நாடு வழங்குகிறது. மேலும் சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக PAKக்கு அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக நெதர்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!