News March 25, 2025
மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 19, 2025
தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு குறைபாடுகள்: RTI தகவல்

தெற்கு ரயில்வே கோட்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது RTI-ல் கிடைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது. ரயில் மோதலை தவிர்க்கும் கவாச் அமைப்பு, 5084 கி.மீ தூரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய நிலையில், 1984 கி.மீ தூரத்திற்கு மட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் தெற்கு ரயில்வேயில் 492 ரயில் நிலையங்களில் 250 இடங்களில் மட்டுமே மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
News November 19, 2025
மதிப்பு கூட்டும் மையங்கள்: 1.50 கோடி வரை மானியம்

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்களுக்கு ₹1.50 கோடி வரை மானியம் கிடைக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து , வங்கியில் கடன் ஒப்புதல் பெற்றபின், மாவட்ட நிர்வாகத்திடம் மானியம் பெறுவதற்காக விண்ணப்பிங்களாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


