News March 18, 2024
பேரனுக்கு ₹240 கோடி பரிசளித்த இன்ஃபோசிஸ் நிறுவனர்

இன்ஃபோசிஸ் நிறுவனர், 4 மாத குழந்தையான தனது பேரனுக்கு ₹240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசளித்துள்ளார். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹனுக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பேரனுக்கு பரிசு வழங்க நினைத்த அவர், தனது நிறுவனத்தின் பங்குகளில் இருந்து 0.04% பங்குகளை (₹240 கோடி) வழங்கியுள்ளார். இதன்மூலம், உலகின் இளம் வயது கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை நாராயண மூர்த்தியின் பேரன் பெற்றுள்ளார்.
Similar News
News December 29, 2025
திமுக மகளிரணி மாநாட்டில் தடபுடல் ஏற்பாடு

பல்லடத்தில் நடக்கும் திமுகவின் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இளைஞரணி மாநாட்டுக்கு நிகராக தடபுடலாக நடந்துள்ளது. 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்கவுள்ள மாநாட்டில், நாற்காலிகள், 120 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங், நொறுக்குத் தீனி, நாப்கின், பாலூட்டும் அறை, மதியம்/இரவு உணவு என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 29, 2025
BREAKING: விஜய்க்கு கடும் எச்சரிக்கை

அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசமாட்டேன் என விஜய் கூறியதற்கு பதிலடி கொடுத்த அவர், இப்படி சொல்ல அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் என ஒருமையில் பேசினார். மேலும், முகக் கவர்ச்சியும், அடுக்கு மொழியும் இல்லாமலே EPS கூட்டத்திற்கு மக்கள் வருவதாகவும், இதை செய்யமுடியாத விஜய் நாவை அடக்கி பேசவேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
News December 29, 2025
2025-ல் அதிகம் விற்பனையான போன் இதுதான்!

நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஐ-போன் 16 முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து Counterpoint Research data வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் ஐ-போன் 16 மொபைல்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 48 லட்சம் போன்களை விற்று Vivo Y29 2-ம் இடத்தை பிடித்துள்ளது. நீங்கள் என்ன போன் யூஸ் பண்றீங்க?


