News February 26, 2025

காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்

image

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர், TVKவின் X பக்கத்தை ஃபாலோ செய்துள்ளதன் மூலம் இது உறுதியாகியுள்ளது. முன்னதாக காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளது தனக்குத் தெரியும் என சீமானும் கூறியுள்ளார். சிறந்த மேடைப் பேச்சாளரான காளியம்மாள் வருகை தவெகவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News March 11, 2026

இனி மொபைல் டேட்டாவிற்கும் வரி!

image

மத்திய அரசு மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்த ஆய்வு செய்யுமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாம். 1 GB டேட்டாவிற்கு ₹1 வரி விதித்தால் கூட, ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி வருவாய் கிடைக்கும். வரி வருவாயுடன் சேர்த்து, அதிகப்படியான ஸ்க்ரீன் டைமை குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாம். ஆலோசனை நிலையில் உள்ள இத்திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

News March 11, 2026

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

சர்வதேச சந்தையில் காலையில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் தற்போது 1 அவுன்ஸ்(28g) $45(₹4,138) குறைந்து $5,189-க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் $3 குறைந்து $86-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 11, 2026

சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

image

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!