News April 25, 2024
பிராய்லர் கோழி சாப்பிட்டால் மலட்டுத்தன்மை?

பிராய்லர் கோழியை அதிகமாகச் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக சில மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரம், பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிச் செலுத்துவதில்லை எனக் கூறும் மருத்துவர்கள், நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது என்கிறார்கள். அந்தத் தடுப்பூசியும் மனிதர்களில் நேரடி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனக் கூறுகின்றனர்.
Similar News
News January 22, 2026
OFFICIAL: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை, விசில் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என கடந்த நவம்பரில் ECI-ல் தவெக விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், கமலின் மநீமவுக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
செங்கோட்டையன் மீது விஜய் ஏமாற்றமா?

செங்கோட்டையன் மூலம் அதிமுகவின் சில EX தலைவர்கள் தவெகவில் இணைந்தாலும், கூட்டணி விவாகரத்தில் விஜய் ஏமாற்றமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக TTV தினகரனை கூட்டணியில் சேர்த்து களம் கண்டால் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற முடியும் என தவெக திட்டமிட்டது. ஆனால், அவர் மீண்டும் NDA-வில் ஐக்கியமாகிவிட்டார். இதனால், கூட்டணி வியூகத்தை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 22, 2026
பிரபல பாடகி ஜானகியின் மகன் காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா (65) காலமானார். பரதநாட்டிய கலைஞரான இவர், ’விநாயகுடு’, ‘மல்லேபுவ்வு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவு எஸ்.ஜானகி உள்பட அவரது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பு சகோதரரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாடகி சித்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


