News August 4, 2024
INDvsSL: இலங்கை அணி பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்றுநேரத்தில் இந்திய அணி பந்துவீச உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், எஞ்சிய இரு போட்டியிலும் வெற்றிபெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடும். இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News March 13, 2026
ரஜினியை திமுக மிரட்டியதா? திருமா ரியாக்ஷன்

ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என திமுக மிரட்டியதாக ஆதவ் அர்ஜுனா கூறியது ஒரு கற்பனை என்று திருமா தெரிவித்துள்ளார். ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் அதிகாரம், ஆட்சி போன்றவற்றுக்கு ரஜினி மயங்க கூடியவர் அல்ல எனவும் கூறியுள்ளார். வலதுசாரிகளின் ஆதிக்கம் மேலோங்கும் சூழலில் அரசியல் தமக்கு உகந்ததது அல்ல என்பதை உணர்ந்து அவர் விலகிவிட்டதாகவும் திருமா பேசியுள்ளார்.
News March 13, 2026
டிரம்ப்பை மோசமாக விமர்சித்த கலிபோர்னியா கவர்னர்

ஈரான் போரால் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணை வாங்க சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கிறோம் என்று டிரம்ப் கூறியிருந்தார். ரஷ்யாவிடம் இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதால் ரஷ்யா பெருமளவில் லாபம் ஈட்டும். இதனை கலிபோர்னியா கவர்னர், ‘டிரம்ப் அனுமதி வழங்கவில்லை; மாறாக அவர்தான் புடின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
News March 13, 2026
அதிமுகவை MGR தொடங்கவில்லையா..!

1972-ல் புதிதாக கட்சி தொடங்க நினைத்த MGR, அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்திருந்த அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார். சாதாரண ஒரு தொண்டனாகவே தன்னை இக்கட்சியில் இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். அதிமுக என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1976-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். தற்போது MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவரின் கட்சியில் <<19370263>>சசிகலா<<>> இணைந்துள்ளார்.


