News August 4, 2024
INDvsSL: இலங்கை அணிக்கு பின்னடைவு

இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டி தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில், இலங்கை வீரர் ஹசரங்கா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். தசைப்பிடிப்பால் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்ததற்கு, அவர் பெரும் பங்காற்றினார்.
Similar News
News December 22, 2025
வளர்ச்சி உடன் MH உறுதியாக உள்ளது: PM மோடி

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் BJP தலைமையிலான மஹாயுதி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில், இந்த வெற்றிக்கு அம்மாநில மக்களுக்கு PM மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தங்களது (BJP) தொலைநோக்கு பார்வையில் உள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, வளர்ச்சி உடன் மஹாராஷ்டிரா (MH) உறுதியாக நிற்கிறது என்றும் கூறியுள்ளார்.
News December 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 557 ▶குறள்: துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. ▶பொருள்: மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.
News December 22, 2025
₹52 கோடிக்கு விற்பனையான ‘பராசக்தி’ OTT உரிமம்

‘பராசக்தி’ படத்தின் OTT உரிமத்தை ஜீ5 நிறுவனம் ₹52 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, சிவகார்த்திகேயன் படத்திற்கான அதிகபட்ச OTT விலையாகும். அதேபோல், இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அனைத்து முக்கிய உரிமங்களும் விற்கப்பட்டுவிட்டதால், எந்தவித பிரச்னையும் இன்றி படம் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு படம் ரிலீசாகிறது.


