News June 27, 2024
INDvsSA: ரசிகர்களுக்கு இலவசம்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் (On-Off) கிரிக்கெட் போட்டி, (ஜூன் 28) நாளை முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை, ரசிகர்கள் அனைவரும் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கு பிறகு, தென் ஆப்பிரிக்காவுடனான 3 டி20 போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News November 6, 2025
சென்னையில் நாளை கடைசி!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு +2, ITI, டிகிரி போதும். +2 படித்தவர்களுக்கு ரூ.9,600, ITI-ரூ.11,040, டிகிரி-ரூ.12,300, டிப்ளமோ-ரூ.10,900 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியின் மதிப்பெண் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு <
News November 6, 2025
சென்னை: ரேஷன் கார்டு இருக்கா? நாளை சூப்பர் வாய்ப்பு!

சென்னையில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (நவ.8) நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி-பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க.
News November 6, 2025
பெரும்பாக்கம் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை நீடிப்பு

பெரும்பாக்கம் அரசு ஐ.டி.ஐ-யில் கணினி பழுது நீக்கத்தில் 5 இடங்கள் மற்றும் பைக், கார் மெக்கானிக் பயிற்சியில், 36 காலி இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள், வரும் 14ம் தேதிக்குள், நேரில் வந்து விண்ணப்பித்து, பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும், 9962986696 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, ஐ.டி.ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


