News February 12, 2026

INDvsPAK போட்டி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

image

இலங்கையில் பிப்.15-ம் தேதி பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான T20 போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதன் காரணமாக இலங்கைக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ₹7,127 ஆக இருந்த சென்னை – இலங்கை விமான கட்டணம் ₹40,000 வரையும், டெல்லி, மும்பை – இலங்கை விமான கட்டணம் ₹70,000 வரையும் உயர்ந்துள்ளது.

Similar News

News February 12, 2026

DMK மீது கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: தமிழிசை

image

திமுகவின் வெற்றி குறித்து காங்., நம்பிக்கையுடன் இருந்தால், இடையில் விஜய் பக்கம் சாய்ந்தது ஏன் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் பாதுகாப்பாக இல்லை; போதைப்பொருள் மாஃபியா தலைவிரித்தாடுகிறது. இதனால், திமுக ஆட்சி மீது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சாடினார். மேலும், திமுக மீது அதன் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை எனக்கூறிய அவர் 2026-ல் NDA ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக இருங்க: ஸ்டாலின்

image

சமீபகாலமாக திமுக கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பை சுட்டிக்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. இந்நிலையில், ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடைய முடியாது; அதனால், தோழமை கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வோடு நாம் பணியாற்ற வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இதை செய்தாலே, 2024 போல் 2026 தேர்தலிலும் முழு வெற்றியும் நம் வசமாகிவிடும் எனத் தெரிவித்தார்.

News February 12, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 12, தை 29 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு▶பரிகாரம்: தைலம்.

error: Content is protected !!