News August 12, 2025
இமாலய சாதனை படைத்த INDvsENG 5-வது டெஸ்ட்!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்டின் 5-வது நாள் போட்டியை, சுமார் 1.3 கோடி மக்கள் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்துள்ளனர். டிஜிட்டல் பிளாட்பார்மில் டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்த அதிகபட்ச Viewership இதுதான். 5-வது நாளில், வெறும் 36 ரன்களை எடுக்க முடியாமல், இங்கிலாந்து அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. நீங்க போட்டியை எதில் பாத்தீங்க?
Similar News
News August 12, 2025
TN அரசின் இலவச லேப்டாப்: 2 நிறுவனங்கள் தேர்வு

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்திற்கு Dell மற்றும் Acer நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன. 8 GB RAM, 256 ROM, 15.6 இன்ச் திரை, புளூடூத் வசதிகள் கொண்ட லேப்டாப்பிற்கு Dell நிறுவனம் ₹40,828 நிர்ணயித்துள்ளது. அதேபோல், 14 இன்ச் டிஸ்பிளே கொண்ட லேப்டாப்பிற்கு Acer நிறுவனம் ₹23,385 நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏற்றுள்ள எல்காட் நிறுவனம் இம்மாதத்தில் ஒர்க் ஆர்டரை வழங்க உள்ளதாம்.
News August 12, 2025
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்? நேரு விளக்கம்

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என தெரிவித்த அவர் கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 12, 2025
என் சாவுக்கு காதலனே காரணம்.. உயிரை விட்ட பெண்

‘எனது சாவிற்கு காதலன் ரமீஸும், அவரது குடும்பமுமே காரணம். மதம் மாறச் சொல்லி என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்கள்.’ கேரளா எர்ணாகுளத்தில் டீச்சர் டிரைனிங் மாணவி சோனா(23) தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய வரிகள் இவை. வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்த அவருக்கு நடந்த கொடுமைகள் அவரது உயிரையே பறித்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், ரமீஸை கைது செய்து விசாரித்து வருகிறது.