News March 12, 2026
Induction Stove-வுக்கு அதிகரித்த டிமாண்ட்.. No Stock!

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையை அடுத்து, இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிளிங்கிட், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் 2-3 நாட்களாக ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பிளிப்கார்ட்டில் மட்டும் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பல தளங்களில் இப்போது இண்டக்ஷன் ஸ்டவ் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் இதே நிலைதான் உள்ளதாம்.
Similar News
News April 13, 2026
பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!

பாஜக தேர்தல் அறிக்கை நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதனை, சென்னை ஐடிசி நட்சத்திர விடுதியில் JP நட்டா மற்றும் பியூஸ் கோயல் வெளியிடுவதாக கூறினார். நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது பற்றி <<19638026>>நிர்மலா சீதாராமன்<<>> மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தும், ஸ்டாலின் அப்படியே திரித்து பேசியிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
News April 13, 2026
முடிவை மாற்றிய சங்கீதா.. விஜய் மகிழ்ச்சி

ஏப்.20-ம் தேதி சங்கீதா செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, வரும் 20-ம் தேதி அன்று விவகாரத்து வழக்கு விசாரணைக்கு பிறகு சங்கீதா, விஜய்க்கு எதிராக ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் தரப்பு சங்கீதாவுடன் பேசியதாகவும், அதில் மனம் மாறிய அவர், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 13, 2026
காமராஜரை திமுக கொச்சைப்படுத்தியது: EPS

காமராஜர், MGR, ஜெ., ஆகியோரை கொச்சைப்படுத்துவதே திமுகவினரின் வேலை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். காமராஜர் பற்றி கொச்சையாக பேசிய திருச்சி சிவாவை ஸ்டாலின் கண்டிக்க தவறியதாக அவர் விமர்சித்தார். தனிப்பட்ட தாக்குதல் விமர்சனம் பற்றி பதிலளித்த அவர் உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்றார். இனி கொச்சைப் பேச்சுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும் EPS கூறினார்.


