News October 26, 2025
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள்!

புதுமை, தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகிய மூன்றும் இணைந்து உருவாகும்போது பல அற்புதங்கள் நிகழ்கின்றன. இன்று, இந்தியாவில் பல இளம் தொழில் முனைவோர்கள், தங்கள் நிறுவனங்களை பில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்தி, “இளம் கோடீஸ்வரர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News January 13, 2026
‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

பாகுபாடு ஒழிப்பை கற்றுத்தர வேண்டிய கல்லூரியிலேயே, நிறவெறி சர்ச்சையால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பல் மருத்துவம் பயின்று வந்த யஷஸ்வினியிடம், கருப்பாக உள்ள ஒருவர் எப்படி டாக்டராக முடியும் என ஆசிரியர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த அவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கல்லூரி முதல்வர் உள்பட 5 பேர் மீது FIR பதிந்து போலீஸ் விசாரிக்கிறது.
News January 13, 2026
தித்திப்பான சர்க்கரை பொங்கல் ருசிக்க.. இதோ டிப்ஸ்

தமிழர் திருநாளான பொங்கல் அன்று எல்லோர் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்வது வழக்கம். இதில் ருசியை அதிகரிப்பதற்கு சில டிப்ஸ் *தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் வற்றுவதற்கு கொஞ்சமாக ரவை சேர்க்கலாம் *தண்ணீர் அளவை குறைத்து பால் ஊற்றுங்கள் *அரிசி, பருப்பை வறுத்து பயன்படுத்தினால் பொங்கலின் வாசனை மணக்கும் *வெல்லம் சேர்க்கும் போது அத்துடன் கரும்பு சாறு ஊற்றி கிளறினால் பொங்கல் சூப்பராக இருக்கும்
News January 13, 2026
ரேஷன் கார்டு தொலைந்தாலும் பொங்கல் பரிசு

ரேஷன் கார்டு தொலைந்து போனவர்களும், புதிய ரேஷன் கார்டு நகலுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் பொங்கல் பரிசை பெறலாம் என உணவு வழங்கல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் (அ) கார்டு எண் இருந்தால் போதும். பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் கார்டு ஸ்கேனிங்கிற்கு பதிலாக, கார்டு எண்ணை பதிவு செய்து, கை ரேகை வாயிலாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.


