News August 8, 2024
சிங்கப்பூர் GDPஐ மிஞ்சும் இந்திய செல்வந்தர்கள்

நாட்டின் மூன்று முக்கிய கோடீஸ்வர குடும்பங்களான அம்பானி, பிர்லா, பஜாஜ் ஆகியோரின் சொத்து மதிப்பு தொடர்பான ஆய்வறிக்கையை பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மூன்று குடும்பங்களும் சேர்ந்து சுமார் ₹38.6 லட்சம் கோடி சொத்து வைத்திருக்கின்றனர். இது, மொத்த சிங்கப்பூரின் GDP-ஐ விட அதிகமாகும். அடுத்தடுத்த இடங்களில் ஷிவ் நாடார், மஹிந்திரா குடும்பங்கள் இருக்கின்றன.
Similar News
News October 27, 2025
மீண்டும் இணைகிறதா பாஸ் கூட்டணி?

‘நீயெல்லாம் நல்லா வரணும்டா’ என்று நட்புக்கான கலக்கல் காம்போவாக சினிமாவில் ஜொலித்தவர்களில் ஆர்யா – சந்தானமும் உண்டு. பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சேட்டை என இந்த கூட்டணிக்கென்று தனி ரசிகர்களே உள்ளனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கதைகளை இருவருமே கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ஜாய் தான்!
News October 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 27, ஐப்பசி 9 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News October 27, 2025
வக்ஃபு சட்டம் குப்பையில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் குப்பையில் கிழித்து எறியப்படும் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பிஹார் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிய அவர், அம்மாநில CM நிதிஷ்குமார் மதவாத சக்திகளுடன் கைகோர்ப்பதால் மாநிலத்தில் வெறுப்பு பரவுகிறது என்றும் விமர்சித்தார். வக்ஃபு குறித்த தேஜஸ்வியின் ஆவேச பேச்சு தற்போது பிஹார் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.


