News August 10, 2024
இந்தியாவின் UPI சேவை மாலத்தீவில் அறிமுகம்

மாலத்தீவில் UPI அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான இந்த ஒப்பந்தம் மூலம், சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகளவில் 40% UPI பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்த அவர், இது ஒரு டிஜிட்டல் புரட்சி என்றார். முன்னதாக, இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இந்த சேவை அறிமுகமானது.
Similar News
News November 18, 2025
டெல்லி ஐகோர்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் 4 நீதிமன்றங்கள், CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது கவனிக்கத்தக்கது.

BREAKING: கோவையில் PM மோடியை சந்திக்கிறார் EPS

நாளை கோவை வரும் PM மோடியை, EPS சந்தித்து பேசுகிறார். கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் PM மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக, விமான நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் PM மோடியை சந்தித்து EPS பேச உள்ளார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம், TN-ல் NDA கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.