News June 26, 2024
ஆஃப்கன் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு

ICC-யில் கடந்த 2017ல் ஆஃப்கன் அணி நிரந்தர உறுப்பினரான நிலையில், மிகக் குறுகிய காலத்தில் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளது. ஆஃப்கனின் வளர்ச்சியில் BCCI-யின் பங்கு முக்கியமானது. உத்தரபிரதேசம் ஆஃப்கனுக்கு தற்காலிக சொந்த மைதானமாக இருந்தது முதல், இந்திய பயிற்சியாளர்களின் பயிற்சி மற்றும் IPL வரை, அந்த நாட்டு வீரர்களை செதுக்கியதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.
Similar News
News November 24, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.24) காலை 8.30 மணி நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 210 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 141 மில்லி மீட்டர், சிதம்பரம் 140.2 மில்லி மீட்டர், புவனகிரி 140 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 103 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 86.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 1681.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
News November 24, 2025
BREAKING: தமிழகத்தில் பஸ் விபத்து.. 6 பேர் மரணம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை தென்காசி அரசு ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஹாஸ்பிடலில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
News November 24, 2025
₹20 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் காதல் வாட்ச்!

1912-ல் டைட்டானிக் கப்பலில் பலியான தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ்க்கு சொந்தமான தங்க பாக்கெட் வாட்ச், ஏலத்தில் சுமார் ₹20 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது. கப்பல் மூழ்கும் போது, ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஒருவரையொருவர் பிரிய மறுத்து உயிரிழந்த காதல் ஜோடி. அவர்களது காதல் சின்னமாக விளங்கிய இந்த வாட்ச், தற்போது டைட்டானிக் நினைவு பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.


