News March 29, 2025

இந்திய பணக்காரர்களிடம் ₹98 லட்சம் கோடி உள்ளது

image

2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.

Similar News

News January 7, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 573
▶குறள்:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். ▶பொருள்: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

News January 7, 2026

பாஜக IT செல் APP-ஐ பயன்படுத்தும் ECI: மம்தா

image

SIR பணிகளை எதிர்த்து வரும் மே.வங்க CM மம்தா பானர்ஜி ECI பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்காக, பாஜக IT செல் உருவாக்கிய மொபைல் APP-ஐ ECI சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியான வாக்காளர்களை இறந்தவர்களாகக் காட்டுவது, வயதானவர்கள் நேரில் அழைப்பது என ஜனநாயகத்திற்கு விரோதமாக ECI செயல்படுவதாகவும் மம்தா சாடியுள்ளார்.

News January 7, 2026

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை கண்டித்துள்ள CPM

image

திருப்பரங்குன்றம் <<18776534>>தீர்ப்பு <<>>நீதி பரிபாலன முறை எதிரானது CPM மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை மனுதாரரும் சொல்லவில்லை, கோர்ட் தீர்ப்பிலும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார். TN அரசை குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கோர்ட் செயல்பட்டுள்ளதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!