News March 30, 2025
இந்தியாவின் பணக்கார ஊர்: பேங்கில் மட்டும் ₹7,000 கோடி!

இந்தியாவின் ஒரு கிராம மக்கள் மட்டும் சுமார் ₹7,000 கோடியை வங்கியில் வைத்திருக்கிறார்கள். 32,000 பேர் வசிக்கும் குஜராத்தின் மாதப்பர் தான் ஆசியாவின் பணக்கார கிராமம். வெளிநாட்டில் செட்டிலான இக்கிராமத்தை சேர்ந்த 1,200 குடும்பத்தினர் அனுப்பும் பணம்தான் இங்கு வந்து குவிகிறது. ஊர் மக்கள் சேர்ந்து தங்கள் கிராமத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பெரிய நகரங்களுடன் போட்டியிடம் அளவிற்கு மாற்றியிருக்கின்றனர்.
Similar News
News April 3, 2025
IPL: கொல்கத்தா அணி பேட்டிங்…!

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியும் சற்றுநேரத்தில் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் மல்லுக்கட்ட ரெடியாகி வருகின்றன. கடந்த ஐபிஎல் ஃபைனலில் ஹைதராபாத்தை வீழ்த்தியே கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை மோதிய நிலையில், கொல்கத்தா 19 முறை, ஹைதராபாத் 9 முறை வென்றுள்ளன. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?
News April 3, 2025
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சல் விதி தெரியுமா?

ரயில் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்கையில் சில நேரம் வெயிட்டிங் லிஸ்ட் வரும். அந்த டிக்கெட்டில் நாம் பயணிக்க முடியாது. எனினும் டிக்கெட் கன்பர்ம் ஆகும் என்ற நம்பிக்கையில் பயணிகள் அதை வைத்திருப்பர். அந்த டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கவுன்டரில் கொடுத்து கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பணம் திருப்பி தரப்படும். இல்லையேல் பணம் திருப்பித் தரப்பட மாட்டாது.
News April 3, 2025
திமுக கூட்டணியை பிளவுபடுத்த முடியாது: ஸ்டாலின் உறுதி

திமுக கூட்டணியை பிளவுப்படுத்த முடியாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அவர், கூட்டாட்சி என்பது ஒன்றிய அரசுக்கு அலர்ஜியாகி விட்டதாக விமர்சித்தார். மாநில உரிமையை மத்திய அரசு விரும்பவில்லை எனவும், மத்திய பாஜக அரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகமும், கேரளாவும்தான் என்றும், மாநில சுயாட்சி, திமுகவின் உயர்க் கொள்கை என்றும் கூறினார்.