News April 25, 2024
இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 9.67% உயர்வு

கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 3% சரிந்த நிலையில், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதி 9.67% அதிகரித்து 2,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் மருந்து ஏற்றுமதி 2,540 கோடி டாலராக இருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அதிகப்படியான மருந்துகள் ஏற்றுமதியாகியுள்ளன.
Similar News
News January 22, 2026
சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வேலை

சென்னை பூங்கா நகரில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 08 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஜன.27 வரை விண்ணப்பிக்கலாம். செயல் அலுவலர்,சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், எண் 315, தங்கசாலை தெரு, சென்னை -600003 என்ற முகவரியை அனுகலாம்.
News January 22, 2026
BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 22, 2026
BREAKING: 7 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சோகம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பல தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


