News October 8, 2025
நவீன ஆயுதங்களை வாங்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்

பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 AMRAAM ரக ஏவுகணைகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல், சீனாவிடம் இருந்து 20 J-10CE ரக போர் விமானங்களை வங்கதேசம் வாங்க உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் நவீன ஆயுதங்களை வாங்கி குவிப்பது, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதேபோல், இரு நாடுகள் உடனான இந்தியாவின் உறவு தற்போது விரிசல் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 8, 2025
பயோமெட்ரிக் UPI பரிவர்த்தனையின் ஆபத்து

பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனை செய்யும் முறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இது Fast & Easy என்றாலும், இதில் சில ஆபத்துக்களும் உள்ளது. PIN போட்டு, பரிவர்த்தனை செய்யும் போது, தவறான பரிவர்த்தனைகளை தடுக்க முடியும். ஆனால், பயோமெட்ரிக்கில் அதனை செய்ய முடியாது. அதே நேரத்தில், சிலர் போலியாக கைரேகை (அ) Face Recognition மூலம் பணம் திருடவும் வாய்ப்புள்ளதாம்.
News October 8, 2025
எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?

உணவுகளை போல், நாம் உணவுகளை வைக்க உதவும் பாத்திரங்களும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. எந்த பாத்திரங்களில் சாப்பிட்டால் என்ன நன்மைகள், அந்த பாத்திரங்களில் என்ன செய்யக்கூடாது என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க உங்க வீட்டில் எந்த வகை பாத்திரங்களை பயன்படுத்துறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 8, 2025
BREAKING: கரூர் செல்கிறார் விஜய்

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க பாதுகாப்பு கேட்டு விஜய் மனு அளித்திருந்த நிலையில், கரூர் மாவட்ட SP-யை அணுக DGP அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இது ஒருவகையில் அவருக்கு கிடைத்த கிரீன் சிக்னல் என தவெகவினர் கூறுகின்றனர். இதனால், SP-யிடம் நேரம், இடம் குறித்த தகவலை கொடுத்து அனுமதி பெற்று ஓரிரு நாள்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.