News October 22, 2025
சற்றுமுன்: லெஜெண்ட் காலமானார்

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான டாக்டர் ஏக்நாத் சிட்னிஸ் (100) வயது மூப்பால் காலமானார். வல்லரசுகளுக்கு சவால்விடும் இஸ்ரோவை உருவாக்குவதில் விக்ரம் சாராபாய்க்கு உறுதுணையாக இருந்த சிட்னிஸ், நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட்-1 உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இஸ்ரோவில் ‘ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமுக்கு முதலில் வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
தித்திப்பான சர்க்கரை பொங்கல் ருசிக்க.. இதோ டிப்ஸ்

தமிழர் திருநாளான பொங்கல் அன்று எல்லோர் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்வது வழக்கம். இதில் ருசியை அதிகரிப்பதற்கு சில டிப்ஸ் *தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் வற்றுவதற்கு கொஞ்சமாக ரவை சேர்க்கலாம் *தண்ணீர் அளவை குறைத்து பால் ஊற்றுங்கள் *அரிசி, பருப்பை வறுத்து பயன்படுத்தினால் பொங்கலின் வாசனை மணக்கும் *வெல்லம் சேர்க்கும் போது அத்துடன் கரும்பு சாறு ஊற்றி கிளறினால் பொங்கல் சூப்பராக இருக்கும்
News January 13, 2026
ரேஷன் கார்டு தொலைந்தாலும் பொங்கல் பரிசு

ரேஷன் கார்டு தொலைந்து போனவர்களும், புதிய ரேஷன் கார்டு நகலுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் பொங்கல் பரிசை பெறலாம் என உணவு வழங்கல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் (அ) கார்டு எண் இருந்தால் போதும். பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் கார்டு ஸ்கேனிங்கிற்கு பதிலாக, கார்டு எண்ணை பதிவு செய்து, கை ரேகை வாயிலாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
News January 13, 2026
யாருக்கெல்லாம் தமிழக அரசின் விருது?

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட சிறந்த ஆளுமைகளுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான பல்வேறு தலைவர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோரின் பட்டியலை அறிய, மேலே போட்டோக்களை ஸ்வைப் பண்ணுங்க.


