News February 12, 2025

ENG எதிராக இந்தியாவின் மைல்கல் வெற்றி

image

ENG-க்கு எதிராக 2ஆவது அதிக ரன்கள் வித்தியாசத்தில் IND அணி வென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இதற்கு முன்பு 2008இல் ராஜ்கோட்டில் 158 ரன்கள் வித்தியாசத்தில் ENG-ஐ வீழ்த்தியதே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக இன்றளவும் இருந்து வருகிறது. 2014இல் 133 ரன்களில், 2013இல் 127 ரன்களிலும், 2011இல் 126 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றுள்ளது.

Similar News

News February 13, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 177 ▶குறள்: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். ▶ பொருள்: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

News February 13, 2025

சிசுவின் உடலை கடித்து தின்ற நாய்கள்!

image

உ.பி. மாநிலம் லலித்பூர் பெண்கள் அரசு ஹாஸ்பிட்டலில் நேற்று முன்தினம் சங்கீதா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்து, சில நிமிடங்களிலேயே இறந்தது. இந்நிலையில், சிசுவின் உடலை எரிக்க ரூ.200 தருமாறு தந்தை அகிலேஷிடம் ஊழியர் ஒருவர் கேட்க, அவரும் பணம் கொடுத்துள்ளார். ஆனால், அவரோ சிசுவின் உடலை குப்பையில் வீசியுள்ளார். இந்நிலையில், சிசுவின் உடலை தெருநாய்கள் கடித்து பிய்த்து தின்றுள்ளன. துளியும் மனசாட்சி இல்லையா?

News February 13, 2025

ஐபிஎல்.. RCB ரசிகர்களுக்கு நற்செய்தி!

image

RCB ரசிகர்களே தயாராகுங்கள். அணியின் கேப்டன் யார் என்பதை இன்று காலை 11.30 மணிக்கு RCB அறிவிக்க உள்ளது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த டு பிளெசிஸை அந்த அணி விடுவித்துள்ளதால், அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது கோலி கேப்டனாக அறிவிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கோலி இல்லையென்றால் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் லிஸ்டில் உள்ளனர்.

error: Content is protected !!