News January 23, 2025
இந்தியா அபார வெற்றி

ICC U19 மகளிர் T20 உலகக் கோப்பையில் இந்தியா அபார வெற்றி பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை, வெறும் 59 ரன்கள் மட்டும் எடுத்து படுதோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஷ்மிகா செவ்வன்டி 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் 5, 3, 2 என சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
Similar News
News November 27, 2025
₹7,280 கோடிக்கு சூப்பர் திட்டம்.. இனி சீனாவை நம்ப வேண்டாம்

அரிய வகை கனிமங்களை காந்தங்களாக மாற்றும் ₹7,280 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. EV வாகனங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பிற்கு இந்த காந்தங்கள் இன்றியமையாததாக உள்ளன. இந்த காந்த உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனவே, சீனாவை சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில், ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் காந்தங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
News November 27, 2025
CINEMA 360°: பட்டையை கிளப்பும் கார்த்தி பட பாடல்

*56-வது சர்வதேச திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் சிறந்த திரைப்பட அடையாள விருதை ‘ஆக்காட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது. *விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. *பிரதீப் ரங்கநாதனின் ’LIK’ படத்தில் இருந்து நாளை சிங்கிள் ஒன்று வெளியாகிறது. *கார்த்தியின் ‘வா வாத்தியர்’ படத்தின் 2-வது பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.
News November 27, 2025
ராசி பலன்கள் (27.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


