News April 4, 2024
இந்தியாவின் மிகச்சிறந்த தபால்காரர் காலமானார்

இந்தியாவின் மிகச்சிறந்த தபால்காரராக 1988இல் தேர்வு செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த விக்டர் தன்ராஜ் காலமானார். 1957 முதல் 1992 வரை தபால்துறையில் பணிபுரிந்த அவர், பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார். இதனால் 1988ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த தபால்காரராக தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டிசார் கால உடையை விரும்பி அணிந்து வந்த அவர், தனது 90வது வயதில் பெங்களூரில் காலமானார்.
Similar News
News November 10, 2025
வழுக்கை தலை.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

ஆண்களுக்கு வழுக்கை தலை பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. சிலர் மட்டுமே இதனை வருத்தமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். பலரும் இதற்காக பெரும் கவலை அடைகின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வழுக்கைத் தலையுடன் உள்ள ஆண்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று தெரியுமா? மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியா இருக்கா, இல்லையா?
News November 10, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் தாறுமாறாக ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,480-க்கும், 1 சவரன் ₹91,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News November 10, 2025
பெரும் சதி முறியடிப்பு: 360Kg வெடிபொருள்கள் பறிமுதல்

சில நாள் முன்பு, JeM உடன் தொடர்புடைய டாக்டரான அடில் ராதர் உ.பி.,-யில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ஹரியானாவில் மற்றொரு டாக்டரான முஸம்மில் ஷகில் என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 360Kg வெடிபொருள், AK47 துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 20 டைமர்களை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


