News September 27, 2025

T20-ல் இந்தியா செய்த மாபெரும் சாதனை!

image

<<17842656>>இலங்கைக்கு <<>>எதிரான சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, இந்தியா உலகில் வேறு எந்த அணியும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. T20-ல் இதுவரை விளையாடிய 6 டை பிரேக்கர் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த 6 வெற்றியில் ஒரு Bowl out (பாகிஸ்தான்), 5 சூப்பர் ஓவர் வெற்றிகள் அடங்கும். சூப்பர் ஓவரில் நியூசிலாந்து (2 முறை), இலங்கை (2 முறை), ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது.

Similar News

News September 27, 2025

குரூப் 4: 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

image

ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், தற்போது கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 4,662ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 11.38 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 27, 2025

அக்.5 முதல் வீடுகளுக்கே வரும் ரேஷன் பொருள்கள்

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5, 6 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நாள்களுக்கு பிறகும் விநியோகத்திற்கான தேவை இருப்பின் கள நிலவரத்தை பொறுத்து தேதியை திட்டமிட வேண்டும். வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் நாள்களை நியாயவிலைக் கடைகளில் எழுதி விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

News September 27, 2025

சற்றுமுன்: விஜய்யை பார்க்க விபரீத செயல்

image

விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக தொண்டர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை போலி அடையாள அட்டையுடன் திருச்சி விமான நிலையத்திற்குள் தவெக தொண்டர் புகுந்துள்ளார். அவரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். பின், விஜய்யை பார்ப்பதற்காக இப்படி செய்ததாக அவர் கூறியதை அடுத்து, கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டார்.

error: Content is protected !!