News May 7, 2025
இந்தியாவின் தங்கமகன் சன்னி தாமஸ் காலமானார்!

இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ்(85) மாரடைப்பால் காலமானார். இவரின் தலைமையில் இந்திய அணி, 108 தங்கம், 74 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்களை பல்வேறு தொடர்களில் வென்றுள்ளது. இதில் 3 ஒலிம்பிக் பதக்கங்களும் அடங்கும். இவருக்கு 2001-ம் ஆண்டில் இந்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கி கெளரவித்தது. #RIP
Similar News
News December 9, 2025
HC நீதிபதியை பதவிநீக்கம் செய்ய முடியுமா?

நீதிபதி G.R.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய <<18510590>>திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் நோட்டீஸ்<<>> வழங்கினர். *சட்டப்பிரிவு 124-ன் படி அதற்கு வாய்ப்பு உள்ளது.*ஆனால் முதலில் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். *லோக்சபாவில் 100 (அ) ராஜ்யசபாவில் 50 MP-க்கள் அதனை ஆதரிக்க வேண்டும். *பின்னர் 3 நீதிபதிகள் அமர்வு குற்றச்சாட்டை விசாரிக்கும். *குற்றச்சாட்டு நிரூபணமானால் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படும்.
News December 9, 2025
டாப் 100-ல் 6 இந்திய நகரங்கள்

டேஸ்ட் அட்லஸின் 2025-26 ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 உணவு நகரங்களின் புதிய தரவரிசை வெளியாகி உள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவை என்னென்ன நகரங்கள், எந்த இடத்தில் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. லிஸ்டில் இடம்பெற்றுள்ள சென்னையில், உங்களுக்கு பிடித்த உணவை கமெண்ட் பண்ணுங்க. SHARE.
News December 9, 2025
ECI-க்கு ராகுல் காந்தி பரிந்துரைத்த சீர்த்திருத்தங்கள்

தேர்தலில் 4 முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என ராகுல் காந்தி லோக் சபாவில் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் வாக்காளர்கள் பட்டியல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், வாக்குபதிவு CCTV காட்சிகளை அழிக்க கூடாது, EVM-ஐ பரிசோதிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், தேர்தல் ஆணையரின் தவறுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


