News April 8, 2025
இந்தியாவின் ‘தங்கமகன்’ காலமானார்

இந்திய ஹாக்கி ஜாம்பவான்களில் ஒருவரான ரக்பிர் லால்(95) காலமானார். ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் பொற்காலமான 1950களில், அணியின் முக்கிய வீரராக இருந்த ரக்பிர், ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்கள் (1952, 1956) வென்றார். பஞ்சாபில் போலீஸ் அணியை வழிநடத்திய இவர், தேசிய அளவிலும் 2 தங்கம், 2 வெள்ளி வென்றுள்ளார். நாட்டுக்கு பெருமை சேர்த்த இவரின் மறைவுக்கு விளையாட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 17, 2025
அதிமுக கூட்டணியிலிருந்து புதிய தமிழகம் கட்சி விலகல்?

யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்பதை அடிப்படையாக கொண்டு மட்டுமே கூட்டணி அமைப்போம் எனவும் கூறியுள்ளார். ஆனால், 2026-ல் NDA கூட்டணி வெற்றி பெற்றாலும் ADMK தனித்தே ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் <<16114717>>தலைவர்கள்<<>> கூறி வருகின்றனர். இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து புதிய தமிழகம் வெளியேறுவதாக கூறப்படுகிறது.
News April 17, 2025
போதையில் நடிகையிடம் அத்துமீறிய பீஸ்ட் பட நடிகர்!

போதையில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டது நடிகர் ஷைன் டாம் சாக்கோ தான் <<16114424>>நடிகை வின்சி <<>>தெரிவித்துள்ளார். இருவரும் ‘Soothravakyam’ என்ற படத்தில் நடித்த போது, ஷைன் டாம் இவ்வாறு நடந்து கொண்டதாக வின்சி, மலையாள திரை சங்கத்தில் அளித்த புகாரில், அழுத்தமாக சுட்டிக்காட்டி இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ஷைன் டாம் தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
News April 17, 2025
IPL 2025: வெற்றியை தொடர போவது யார்?

இன்றைய லீக் ஆட்டத்தில், MI – SRH அணிகள் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது. நடப்பு தொடரில் இரு அணிகளும், 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்ஸ் இருப்பதால், ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். இன்று, 2வது பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. யார் ஜெயிப்பாங்க?