News February 18, 2025
இந்தியாவின் ஏற்றுமதிக்கு பாதிப்பு இல்லை: SBI

USAவின் சமவிகித வரிவிதிப்பு நடவடிக்கையால் நாட்டின் ஏற்றுமதிக்கு பாதிப்பு இருக்காது என SBI தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு USA 15%-20% வரை வரி விதிக்க வாய்ப்பு எனக் கணித்துள்ள SBI, இதனால் 3%-3.5% அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி குறையும் என மதிப்பிட்டுள்ளது. மேலும் புதிய வர்த்தக வழிகளை கண்டறிந்து வருவது குறித்து ஆலோசிப்பதாகவும் SBI தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Similar News
News November 19, 2025
Sports Roundup: SA அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு

*இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு. *முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வேவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. *வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு. *100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை முஷ்பிகுர் ரஹீம் பெறவுள்ளார்.
News November 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 19,கார்த்திகை 3 ▶கிழமை:புதன் ▶நல்ல நேரம்: 9.00 AM – 10.30 AM ▶ராகு காலம்: 12.00 PM – 1.30 PM ▶எமகண்டம்: 7.30 AM – 9.00 AM ▶குளிகை: 10.30 AM – 12.00 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: ரேவதி
News November 19, 2025
தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு குறைபாடுகள்: RTI தகவல்

தெற்கு ரயில்வே கோட்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது RTI-ல் கிடைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது. ரயில் மோதலை தவிர்க்கும் கவாச் அமைப்பு, 5084 கி.மீ தூரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய நிலையில், 1984 கி.மீ தூரத்திற்கு மட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் தெற்கு ரயில்வேயில் 492 ரயில் நிலையங்களில் 250 இடங்களில் மட்டுமே மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.


