News November 12, 2024
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.8% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.8% அதிகரித்துள்ளதாக, B2B இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதி 13.034 கோடி டன்னாக இருந்த நிலையில், தற்போது 14.06 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இறக்குமதி செய்யப்பட்ட அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 24, 2025
Farewell இன்றி ஜாம்பவான்கள் ஓய்வு

அஸ்வின், கோலியை தொடர்ந்து மற்றொரு இந்திய டெஸ்ட் ஜாம்பவான் புஜாரா Farewell போட்டி இன்றி ஓய்வை அறிவித்துள்ளார். அணியின் எதிர்காலம் கருதி சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவை பிசிசிஐ ஓரங்கட்டியது. இந்த நிலையில் புஜாரா ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், கோலி, ரோஹித், புஜாரா ஆகியோரில் ஒருவருக்கு கூட பிசிசிஐ Farewell போட்டி நடத்தவில்லை. பிசிசிஐ அணுகுமுறை சரியானதா ?
News August 24, 2025
இதுக்கு சரியாக பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. நீங்கள் இந்த நான்கு ‘9’ எண்களுக்கு நடுவே, +, -, × or ÷ என எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால், 100 என்பதை சரியாக நிரூபிக்க வேண்டும். பார்க்க கஷ்டமாக இருந்தாலும், ரொம்ப ஈசி. எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம்.
News August 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

ஆக.28-ம் தேதியுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்டு 45 நாள்கள் நிறைவடைகிறது. இதனால், முதல் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப நிலையை அறிய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்னும் 4 நாள்களுக்குள் நல்ல செய்தி வரப் போகிறதாம்.