News October 10, 2025
WI அணிக்காக விளையாடிய இந்தியர்கள்: PHOTOS

தற்போதைய WI அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர், தேஜ்நரைன் சந்தர்பால் மட்டும்தான். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து 18-ம் நூற்றாண்டில் தோட்ட கூலிகளாக கரீபியன் தீவுகளுக்கு சென்ற மக்கள், கயானா, டிரினிடாட் & டொபாகோ தீவுகளில் செட்டில் ஆனார்கள். ஆக்ரோசத்துக்கு பெயர் போன WI கிரிக்கெட்டுக்கு இ.வம்சாவளியினர் அமைதியை கொண்டுசேர்த்தனர். WI-ஐ அலங்கரித்த முக்கிய இ. வம்சாவளியினரை ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News October 11, 2025
டிரம்ப்புக்கு நோபலை அர்ப்பணித்த மரியா

தனக்கு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவில் துன்பப்படும் மக்களுக்கும், தங்களது சுதந்திரத்துக்காக ஆதரவளித்த டிரம்ப்புக்கும் அர்ப்பணிப்பதாக மரியா கொரினா மச்சாடோ கூறியுள்ளார். வெனிசுலாவில் ஜனநாயகத்தை அடைவதற்கு டிரம்ப், USA மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் ஜனநாயக நாடுகள் ஆகியவை தங்களது முக்கிய கூட்டாளிகளாக உள்ளனர் என நம்புவதாகவும் மரியா தெரிவித்துள்ளார்.
News October 11, 2025
இந்தியாவின் மனநல தூதரானார் தீபிகா படுகோன்

இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். உலக மனநல தினமான இன்று, இந்த அறிவிப்பை மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசின் மனநல சேவைகள், விழிப்புணர்வை தீபிகா மக்களிடம் ஏற்படுத்துவார். இந்நிலையில், இச்சேவையை மோடி அரசின் கீழ் பெறுவது பெருமையாக இருப்பதாக தீபிகா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
News October 11, 2025
காதலை கன்பார்ம் செய்த ஹர்திக் பாண்ட்யா

மாடல் அழகி மஹைகா சர்மாவுடனான காதலை ஹர்திக் பாண்ட்யா உறுதிப்படுத்தியுள்ளார். இருவரும் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தனது 32-வது பிறந்தநாளை முன்னிட்டு ஹர்திக் பாண்ட்யா மஹைகாவுடன் ஜோடியாக ஊர் சுற்றிய ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். புதிய வாழ்க்கை பயணத்திற்காக வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள், எப்போது கல்யாண விருந்து போடப்போகிறீர்கள் என ஹர்திக்கிடம் கேட்கின்றனர்.