News September 10, 2025
நேபாளத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள்

நேபாளத்தில் Gen Z தலைமுறையின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதனால், அந்நாட்டு PM ஷர்மா ஒலி பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து தற்போது ராணுவ ஆட்சி அமலில் உள்ளது. இதனிடையே, அங்கு உள்ள இந்தியர்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பானிடங்கி வழியாக இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பி வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
திருமண பந்தத்தில் நுழைந்த 9 ஆண்டு காதல் ❤️

பறந்து போ பட நடிகை கிரேஸ் ஆண்டனியின் 9 ஆண்டு கால காதல், திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளது. இசையமைப்பாளர் ஏபி டாம் சிரியக்கை அவர் நேற்று திருமணம் செய்து கொண்டார். கணவரின் முகம் தெரியாமல் முதலில் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தற்போது, காதல் கணவருடன் கைகோர்த்தபடி இருக்கும் படங்களை கிரேஸ் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News September 10, 2025
மாநிறத்தில் இருப்பவர்கள் இந்த கலர் ஆடைகளை தேர்ந்தெடுங்க

மாநிறத்தில் உள்ள ஆண்களே, எந்த நிறத்தில் உடை அணிந்தால் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கும் என தெரியவில்லையா? கவலைவேண்டாம். உங்களுக்கு, சந்தன நிறம், க்ரே, லைட் பிரவுன், ஹாஃப் வைட், லைட் ப்ளூ, குங்கும நிறம் என இதில் இருக்கும் அத்தனை ஷேடுகளும் ஒத்துப்போகும். இந்த நிறங்களில் சட்டைகளை தேர்வு செய்து அதற்கு ஏற்றார் போல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் அவ்ளோதான், செம்ம ஸ்டைலிஷாக தோற்றமளிப்பீர்கள். SHARE.
News September 10, 2025
ஆசிய கோப்பையில் சதம் அடிக்க போகும் இந்தியர் யார்?

ஆசிய கோப்பையில் IND vs UAE போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது UAE மிகச்சிறிய அணிதான். இந்திய அணியில் அதிரடி வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால், இன்று யாராவது ஒருவர் சதம் அடிக்க வாய்ப்புள்ளது. 2022 ஆசிய கோப்பையில் விராட் கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான இந்தியாவே இம்முறையும் கோப்பையும் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.