News September 15, 2024
பாய்ச்சல் காட்டும் இந்திய மகளிர் அணி

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவு 4ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பிரான்ஸை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 – 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. All the best team.
Similar News
News September 16, 2025
ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷம்: ஆர்.பி.உதயகுமார்

ஒற்றுமை என்ற பெயரில் செல்லாக்காசுகள் புதிதாக கோஷம் எழுப்புவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். சிலர் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுக விலாசத்தை சிதைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றனர். EPS-க்கு பலவீனத்தை ஏற்படுத்த நினைக்கும் செல்லாக்காசுகளின் திட்டம் ஒருகாலத்திலும் நடக்காது என்றும், சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News September 16, 2025
மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி

நாளை 75வது பிறந்தநாள் கொண்டாடும் PM மோடிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி பரிசு அனுப்பியுள்ளார். 2022-ம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா வென்ற நிலையில், அந்த தொடரில் தான் பயன்படுத்திய ஜெர்ஸியில் கையெழுத்திட்டு, அதை மோடிக்கு அவர் பரிசாக அனுப்பி வாழ்த்து கூறியுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வரும் மெஸ்ஸி, PM மோடியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 16, 2025
PAK-கிற்கு செல்ல வேண்டிய நீர் இனி இந்தியாவிற்குள் பாயும்

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நீரை, நம் நாட்டில் பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு திருப்பிவிட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகள், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாக்.-க்கு செல்ல வேண்டிய சிந்து நதிநீரை மத்திய அரசு நிறுத்தியது.