News June 28, 2024
இந்திய மகளிர் அணி அபாரம்

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிரிதி (149) மந்தனா, ஷஃபாலி வெர்மா (155*) சதம் விளாசி அசத்தியுள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற IND அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்மிரிதி, ஷஃபாலி, SA வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். IND அணி தற்போதுவரை 314/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.
Similar News
News December 3, 2025
நாளை காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
News December 3, 2025
மக்கள் தொகை கணக்கெடுக்க தயாரான மத்திய அரசு

இரு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
லோக்சபாவில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு இந்த தகவலை உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ளார். அதன்படி முதல் கட்ட கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டம் பிப்ரவரி 2027-ல் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News December 3, 2025
நிலவொளியாக மிருணாளினி ரவி

டிக்டாக் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி, ‘சூப்பர் டீலெக்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரது கியூட்டான முக பாவனைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட்டில், நதியில் மிதக்கும் நிலவொளி பட்டுநிற ஆடை, இயல்பான அழகு, அமைதி, அழகான சிரிப்பு ஆகியவற்றால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


