News March 29, 2024
மலேசியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஆசிய கூடைப்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. சிங்கப்பூரில் ஆசிய கூடைப்பந்து (3×3) தொடர் நடக்கிறது. அதன் தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் ஸ்ரீகலா ராணி, அனிஷா, காவ்யா, புஷ்பா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 20-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
Similar News
News November 24, 2025
பொதுக்குழுவில் EPS-க்கு முழு அதிகாரம்

டிச.10-ல் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் EPS-க்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கவும் முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும், கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தலுக்கு தயாராவது, ஐடி விங் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
News November 24, 2025
கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியால் 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறை அளிக்காத மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிக்கு கிளம்ப தொடங்கிவிட்டனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் 18-வது மாவட்டமாக சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News November 24, 2025
ரயில்வே வேலை, டிகிரி போதும், 8,858 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <


