News March 4, 2025
இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அபுதாபியில் உ.பி. பெண் ஷாஜாதி கானுக்கு (33) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2022ல் இவரது பராமரிப்பில் இருந்த 4 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த பிப்.15ல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 4, 2025
காய்கறி விலை கடும் சரிவு

கடந்த 2 மாதங்களாக விலை உயர்வை சந்தித்து வந்த காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. கோயம்பேட்டில் 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ₹50க்கு விற்பனையான காய்கறிகள் விலை தற்போது ₹15 – ₹20 ஆகக் குறைந்துள்ளது. இன்று (மார்ச் 4) தக்காளி – ₹10, முருங்கை ₹40, முள்ளங்கி, கோஸ் தலா ₹8, பீட்ரூட், கத்திரிக்காய், அவரைக்காய் தலா ₹10க்கும் விற்பனையாகிறது. ஏப்ரல் வரை இதே நிலை தான் நீடிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
News March 4, 2025
அதிமுக உதிரிக்கட்சி தான்: அமைச்சர் சேகர்பாபு

அதிமுகவை இபிஎஸ் ஏற்கெனவே அழித்துவிட்டதால், அவர்களை திமுக போட்டியாக நினைக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, தற்போது உதிரிக்கட்சியாக மாறிவிட்டதாகவும், இபிஎஸ் தலைமையில் அதிமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். வெற்றிகளை மட்டுமே பெற்று வரும் திமுக வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்திய டிரம்ப்

உக்ரைனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நேற்று முதல் நிறுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான அமைதிப்பேச்சு வார்த்தைக்கு உக்ரைனை சம்மதிக்க வைக்கவும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை நிறுத்தவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் நீண்ட காலம் செயல்பட முடியாது எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.