News January 23, 2025
உள்ளூர் போட்டியில் சொதப்பும் இந்திய அணி வீரர்கள்!

இன்றைய ரஞ்சி தொடரின் போட்டிகளில் தேசிய அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் களமிறங்கி சொதப்பி இருக்கிறார்கள். ரோஹித் 3 ரன், ஜெய்ஸ்வால் 4 ரன், ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன், துபே 0, ரஹானே 12 ரன்கள் என அவுட்டாகினார்கள். அதே போல, ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், சுப்மன் கில் 4 ரன்னிலும் அவுட்டாகி இருக்கிறார்கள். சர்வதேச வீரர்கள் உள்ளூர் போட்டியிலேயே இப்படி சொதப்புகிறார்களே என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
Similar News
News November 4, 2025
எந்தெந்த தேதியில் +2 பொதுத்தேர்வு.. முழு விவரம்

* 2/03/25 – தமிழ், மொழிப்பாடங்கள் * 5/03/25 – ஆங்கிலம் * 9/03/25 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் *13/03/25 இயற்பியல், பொருளாதாரம் * 17/03/25 – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், வணிகவியல் * 23/03/25 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் * 26/03/25 – கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல்
News November 4, 2025
ஓவராக பேசிய மேனேஜர்.. கொலை செய்த ஊழியர்!

பெங்களூருவில் IT கம்பெனியில் பணிபுரிந்து வரும் சோமலா வம்சி(24), கண் கூசுவதால் ஆபீசில் உள்ள லைட்டை அணைக்கும்படி, மேனேஜர் பீமேஷ் பாபுவுடன்(41) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, நிதானமிழந்த வம்சி மிளகாய் பொடியை தூவி, பீமேஷ் நெஞ்சில் Dumbbells-ஐ கொண்டு அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பீமேஷ் பாபு மரணமடைந்துள்ளார். கோபத்தால் இன்று இருவரின் வாழ்க்கை அழிந்துவிட்டது!
News November 4, 2025
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாள்கள் வரை விடுமுறை

மார்ச் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை +2 பொதுத்தேர்வும், மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளன. மாணவர்கள் சிரமமின்றி தேர்வுக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் 2 – 5 நாள்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதனால், பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


